1955ஆம் ஆண்டு சீன-நேபாளத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளும் எப்போதுமே ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, உதவி புரிவது, ஒத்துழைப்புகளின் மூலம் கூட்டு வெற்றி பெறுவது உள்ளிட்ட சிறந்த முறைகளில் செயல்பட்டு வருகின்றன.
2008ஆம் ஆண்டு, நேபாளத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசந்தா, முதன்முறையாகச் சீனப் பயணம் மேற்கொண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பங்கெடுத்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, 3வது முறையாக நேபாளத் தலைமையமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுத்தார்.
சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுத்த போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் இரு நாட்டு ஒத்துழைப்புகள் குறித்து மனம் திறந்து உரையாடினேன்.
இப்பயணம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
மேலும், உலகச் சூழ்நிலை மற்றும் நேபாளத்தில் சூழ்நிலை எப்படி மாறினாலும், நேபாளத்தின் அரசியல் நிலைப்பாடும், நேபாள-சீன உறவை வலுப்படுத்துவது என்ற நிலைப்பாடும் மாறாது என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு நேபாளம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவர் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை நேபாளம் ஆக்கமுடன் செயல்படுத்தி வருகிறது.
தற்போது, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றையும் அவர் முன்வைத்தார். நாங்கள் இவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என்றும் பிரசந்தா தெரிவித்தார்.