சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, மனிதரை ஏற்றிச்செல்லும் ஷேன் ச்சோ-18 விண்வெளிக் கலப் பயணத்தில், யே குவாங் ஃபூ, லீ சொங், லீ குவாங் சூ ஆகியோர் விண்வெளி வீரர்களாக பணியாற்றவுள்ளனர்.
யே குவாங் ஃபூ, இக்குழுவின் தலைவராவார் என்று விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி கட்டப் பயணக் கடமைக்கான தலைமையகம் அறிவித்தது.
ஏப்ரல் 24ம் நாள் காலை 11 மணி அளவில், மேற்கூறிய 3 விண்வெளி வீரர்களும், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.