UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர் 

UFC லூயிஸ்வில்லே 2024இல் பிரேசில் வீராங்கனை ராயன்னே டோஸ் சாண்டோஸை தோற்கடித்து, UFC ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் (UFC) சண்டையிட்டு வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை புஜா தோமர் படைத்தார்.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த பூஜா தோமர், யுஎஃப்சி ஒப்பந்தத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை கடந்த ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான ஸ்ட்ராவெயிட் பிரிவில் தனது முதல் சண்டையில், அவர் 30-27, 27-30, மற்றும் 29-28 என்ற கணக்கில் வேறுபட்ட முடிவுகளால் வெற்றி பெற்றார்.
இரு வீரர்களும் தங்களின் பலத்தை வெளிப்படுத்திய இந்த போட்டி மிகவும் கடுமையான போட்டியாக இருந்தது.

You May Also Like

More From Author