மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான இறுதித் தேர்வுக் கால அட்டவணையை (Date Sheet) வெளியிட்டுள்ளது.
தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் தேர்வுக் கால அட்டவணையைப் பார்க்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக, பிப்ரவரி 17 அன்று தொடங்கி, ஜூலை 15, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.
