அன்னிய நாட்டு விலங்குகள் தாவரங்கள் ஆக்கிரமிப்புக்கு சீன சுங்கத்துறை தடுப்பு
அன்னிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆக்கிரமிப்புகளை
சீன சுங்கத்துறை தலைமைப் பணியகம் சிறப்பாக செயல்பட்டு தடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சி, மனித பரிமாற்றம் நாளுக்குநாள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்நிய நாட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் நுழைவு அதிகரித்து வருகின்றன. அதனால் இடர்பாடுகளும் தொடர்ந்து பெருகி வருகின்றன.
இதனை தடுக்கும் செயல்பாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் சட்ட விரோதமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்கி அந்நிய நாட்டு விலங்குகள் தாவரங்கள் நாடு கடந்த ஆக்கிரமிப்பு தடுத்துள்ளன.
இதன் மூலம் சுங்கத்துறை பணியகம் சீனாவின் உயிரின சூழல் மற்றும் உயிரின பல்வகை தன்மையை பாதுகாக்கிறது.