அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எல். யெல்லன் 9ஆம் நாளுடன் தனது நான்கு நாட்கள் சீனப் பயணத்தை முடித்து கொண்டார். இந்த நாட்களில் நடந்த சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று சீனாவும் அமெரிக்காவும் ஒருமனதாக தெரிவித்தன.
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி மற்றும் நாணயத் துறைகளில் இரு நாட்டு தொடர்பு மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கும் திட்டவட்டமான நடவடிக்கையாக யெல்லனின் இப்பயணம் கருதப்படுகிறது. தூதாண்மை உறவு நிறுவப்பட்டதிலிருந்து சீன-அமெரிக்க உறவு தாழ்ந்த புள்ளியில் உள்ள தருணத்தில் இரு நாடுகளின் இத்தகைய கருத்துக்கள், சீன-அமெரிக்க உறவைத் தணிவுப்படுத்தத் துணை புரிவதாகவும், சர்வதேசச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தியதாகவும் அமைகின்றன.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், சீனாவும் அமெரிக்காவுக்குமிடையிலான கருத்து வேற்றுமை இன்னும் உள்ளது.
இப்போது சீன-அமெரிக்க உறவு சிக்கலில் உள்ள அடிப்படை காரணம், சீனா குறித்து அமெரிக்காவின் தவறான புரிதல் ஆகும். “பரஸ்பர நன்மை, கூட்டு வெற்றி ஆகியவை சீன-அமெரிக்க பொருளாதார உறவின் அடிப்படை” என்பதை அமெரிக்கா உண்மையில் அங்கீகரிக்கவில்லை.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பது, சீனா, அமெரிக்கா என இரண்டுக்கும், நடைமுறை ரீதியான தேவையாகவும் சரியான தேர்வாகவும் விளங்குகின்றது என்பதை அமெரிக்கா உணரவில்லை. பொருளாதார விவகாரம், பொருளாதாரத்துக்கு மட்டும் சொந்தமானது, அரசியல் விவகாரம், அரசியலுக்கு மட்டும் சொந்தமானது.இரு நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பை, அரசியல் மற்றும் நாட்டு பாதுகாப்புடன் இணைப்பது, உலகின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியாது.