அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக பாரதம் உருவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக Indian Council for Research on International Economic Relations ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளை விட டிஜிட்டல் மயமாக்கலின் நிலை சிறந்தது என்பதைக் காட்டுகிறது.
பிரிட்டன் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், தென் கொரியா ஆறாவது இடத்திலும், உள்ளன. ஜப்பான் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மக்கள்தொகையின் மிகப்பெரிய அளவைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த அளவில் சிறப்பாகச் செயல்படுகிறது.
700 மில்லியனுக்கும் மேலாக, உலகில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
மலிவு விலையில் டேட்டா இணைப்பை வழங்குவதிலும், பேமெண்ட் ஆப்ஸ் போன்ற இணைய அடிப்படையிலான சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதிலும் பாரதம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும், மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.