யுனைடெட் கிங்டமில் குடும்ப விசா மூலம் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சம்பள வரம்புகளின்படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 29,000(பிரிட்டிஷ் பவுண்டுகள்)ஆக இருந்தால் மட்டுமே அவர்கள் குடும்ப விசா பெற தகுதி பெறுவார்கள்.
முன்பு, இதற்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 18,600ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முன்பை விட குறைந்தபட்ச ஆண்டு சம்பள வரம்பு தற்போது 55% அதிகரித்துள்ளது.
குடும்ப விசா சம்பள வரம்பை திறமையான தொழிலாளர் விசா சம்பள வரம்புக்கு ஏற்றது போல் மாற்றியமைக்க இந்த சம்பள வரம்பு உயர்வு அறிவிக்கப்பட்டது.
ரிஷி சுனக் அரசாங்கம் கடந்த ஆண்டு சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உயர்வை அறிவித்தது.