TNPSC குரூப் 2: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… எப்படி விண்ணப்பிப்பது…??? 

Estimated read time 1 min read

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த நிலையில் இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2327 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி டி என் பி எஸ் சி வெளியிட்டது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முதலில் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் நிரந்தர பதிவை உருவாக்க வேண்டும்.

அந்தப் பதிவு ஐந்து ஆண்டுகள் வரை செல்லும். அந்த ஐந்து ஆண்டுகளுக்கும் அனைத்து தேர்வுகளுக்கும் பதிவு கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

நிரந்தர பதிவு பெற www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று one time registration new users என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து திறக்கும் பக்கத்தில் பயனாளர் குறியீட்டை உருவாக்க வேண்டும்.

அதை உருவாக்கிய பிறகு வரும் பக்கத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் கொண்டு அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

நிரந்தர பதிவு செய்தவுடன் நோட்டிபிகேஷன் இல் காணப்படும் குரூப் 2 தேர்வு என்பதை கிளிக் செய்து விண்ணப்ப பதிவை தொடங்கலாம்.

அந்த விண்ணப்பம் எட்டு நிலைகளைக் கொண்டது.

அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு கட்டணம் செலுத்திய பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு விண்ணப்ப எண் வழங்கப்படும்.

விண்ணப்பித்த பிறகு அது சரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை நிரந்தர பதிவுக்கு சென்று உறுதி செய்யலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author