உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ்-ற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 25% வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது இறக்குமதியை குறைத்துக்கொண்டு தற்போது அதை நிறுத்தியுள்ளதாக பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
வரி விதிப்பு எதிரொலி: இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதாக அமெரிக்கா தகவல்
