ஹாங்காங்கில் நடைபெற்ற பசுமை புத்தாக்க மாநாடு

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டு ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பசுமை புத்தாக்க மாநாடு அக்டோபர் 26ஆம் நாள் சீனாவின் ஹாங்காங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில், தொடரவல்ல வளர்ச்சியை ஊக்குவித்து உலகளாவிய தெற்கு நாடுகளின் பசுமை மாற்றத்தை முன்னேற்றுவது குறித்து விவாதிப்பதற்காக, 20க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹுவாங் ருன்ஜியூ உரை நிகழ்த்துகையில், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முழு போக்கிலும் பல்வேறு துறைகளிலும் பசுமை வளர்ச்சி என்ற கருத்தை ஒன்றிணைப்பதில் சீனா நிலைத்து நிற்கிறது என்றும், மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகம் என்ற கருத்தை பின்பற்றி, பசுமையான, குறைந்த-கார்பன் மாற்றம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து ஆழமாக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், சீனாவின் தொழில்நுட்ப பலன்களை அடிப்பைடையாகக் கொண்ட பசுமையான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, பல்வேறு நாடுகளின் தேவைகளுடன் ஒத்துப்போகிறது. உலகளாவிய தெற்கு நாடுகளில் பசுமை மாற்றத்தின் நடைமுறையாக்கத்தை மேம்படுத்த துணைபுரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author