
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது ஆதரவை அரசியல் கட்சிகளுக்குத் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், அகில இந்திய சித்த வைத்தியர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் மருத்துவர் G. கருணாமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தங்களது சங்கம் முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
மேலும், அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் உள்ள சித்த மருத்துவர்கள் தீவிரமாகப் பாடுபடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பல சிறு அமைப்புகள் அதிமுக பக்கம் சாய்வது, எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்திற்குப் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
