மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் வரையப்பட்டிருந்த பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திற்குத் தனது கைகளால் வர்ணம் தீட்டி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
இது வெறும் வர்ணம் தீட்டும் நிகழ்வு மட்டுமல்ல, புதுச்சேரியில் தாமரையை மலர வைக்கப் போகும் சமிக்ஞை என பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே, புதுச்சேரியில் என்டிஏ (NDA) கூட்டணியை மேலும் வலுப்படுத்த, தேமுதிக-வை இழுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இதற்காகவே அமித்ஷாவின் இந்த விசிட் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளையும் குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வரும் நிலையில், தேமுதிக இக்கூட்டணியில் இணைந்தால் அது ஆளும் தரப்புக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
