பிப்ரவரி 22ஆம் நாள் சீன வசந்த விழா விடுமுறைக்கான போக்குவரத்தின் 21ஆவது நாளாகும். சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் தரவின்படி, இதற்கு முந்தைய 20நாட்களில், சீனாவில் பிரதேசங்களைக் கடந்த பயணங்களின் மொத்த எண்ணிக்கை 508கோடியை எட்டி நாளுக்கு 25கோடி பயணங்கள் நிறைவேற்றப்பட்டன. இது, 2025ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 5.6விழுக்காடு அதிகரித்து வரலாற்றில் புதிய பதிவை உருவாக்கியது.
மேலும், பிப்ரவரி 21ஆம் நாள், திரும்பும் பயணிகளின் அதிகரிப்புடன், முழு சமூகத்தில் பிரதேங்களைக் கடந்த பயணங்களின் எண்ணிக்கை 36கோடியைத் தாண்டக் கூடும். இருப்புப்பாதை மூலம் நிறைவேற்றப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 1கோடியே 68லட்சத்தை எட்டுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 21ஆம் நாள், நெடுஞ்சாலை மூலமான பயணங்களின் எண்ணிக்கை 33கோடியே 90லட்சத்தைத் தாண்டி கடந்த ஆண்டை விட, 12விழுக்காடு அதிகரிக்கும். நீர்வழி போக்குவரத்து மூலமான பயணங்களின் எண்ணிக்கை 18லட்சத்து 10ஆயிரத்தை எட்டி கடந்த ஆண்டை விட, 27.6விழுக்காடு அதிகரிக்கும். பயணியர் விமானங்களின் மூலமான பயணங்களின் எண்ணிக்கை 26லட்சத்து 30ஆயிரத்தை எட்டி 8.3விழுக்காடு அதிகரிக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
