சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜுன் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் பண்பாட்டின் பரவல் மற்றும் வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
புதிய துவக்கப் புள்ளியில், பண்பாட்டின் செழுமையைத் தொடர்ந்து முன்னேற்றி, பண்பாட்டு வல்லரசையும், சீன தேசத்தின் நவீன நாகரிகத்தையும் கட்டமைப்பது, புதிய யுகத்தின் பண்பாட்டுத் துறையில் சீனாவின் புதிய பணியாகும். பண்பாட்டின் மீதான சுய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, கூட்டு முயற்சியுடன் தற்காலத்துக்கு உகந்த புதிய பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தை சீராக நடத்தும் விதம், சீனத் தேசிய வெளியீடுகள் மற்றும் பண்பாட்டு ஆவணக் காப்பகம், சீன வரலாற்று ஆய்வு கழகம் ஆகியவற்றில் அவர் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.