அனைவருக்கும் ஆரோக்கியமான கூட்டு எதிர்காலம் எனும் போ ஆவ் ஆசிய மன்றத்தின் கிளை கூட்டம் மார்ச் 26ஆம் நாள் ஹாய் நான் மாநிலத்தின் போ ஆவ் மாவட்டத்தில் நடைபெற்றது. சுகாதார சமத்துவத்தை முன்னேற்றும் வகையில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தற்போது உலகச் சுகாதார வளர்ச்சி முக்கிய மாற்றக் காலத்தில் உள்ளது. ஒத்த கருத்துக்களை உருவாக்கி முறையான மாற்றத்தை முன்னேற்றுவது அவசியம். எந்தவொரு தனிநபரும் அல்லது நாடும் சிக்கலான சவால்களை சுயாதீனமாக சமாளிக்க முடியாது. அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட்ட வேண்டும் என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் முன்னாள் நியூசிலாந்து துணை தலைமையமைச்சருமான ஜெனிபர் மேரி ஷிப்லி தெரிவித்தார்.
