“யாகி” என்னும் இவ்வாண்டின் 11வது கடும் சூறாவளி செப்டம்பர் 6ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மற்றும் குவாங்தொங் மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதற்கு முக்கியத்துவம் அளித்து, இது குறித்து முக்கிய உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களைக் குடியமர்த்தும் பணியை உகந்த முறையில் மேற்கொண்டு, உயிரிழப்பை முழுமூச்சுடன் குறைக்க வேண்டும் என்றும், சீர்குலைக்கப்பட்ட போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வெகுவிரைவில் செப்பனிட்டு, புனரமைப்புப் பணியை ஆக்கமுடன் மேற்கொண்டு, மக்களின் உயிர் மற்றும் உடமை பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.