மா சே துங்கின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி 26ம் நாள் மக்கள் மாமண்டபத்தில் ஒரு நினைவு கருத்தரங்கை நடத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் உரைநிகழ்த்தினார்.
மா சே துங், மகத்தான மார்க்ஸிஸ்ட், மகத்தான பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், உத்தியாளர், தத்துவ வல்லுநர், மார்க்ஸிஸத்தைச் சீனமயமாக்கியவர், சீன சோஷலிச நவீனமயமாக்க இலட்சியத்த்துக்கு வித்திட்டவர், சமகாலத்தில் சிறந்த நாட்டுப்பற்றாளர், தேசிய வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது மத்திய தலைமைக் குழுத் தலைவர், சீன மக்களுக்குத் தலைமை தாங்கி சொந்த விதி மற்றும் நாட்டின் நிலைமையை மாற்றிய மாமனிதர், உலகில் அடக்குமுறையிலுள்ள தேசத்தின் விடுதலை மற்றும் மனித குல முன்னேற்ற இலட்சியத்துக்குப் பெரும் பங்கு ஆற்றிய சர்வதேசவாதி ஆவார்.
மா சே துங்கின் சிந்தனை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வமாகும். இது, நமது செயல்பாடுகளுக்கு நீண்டகாலமாகத் தலைமை தாங்கும். அவர் துவங்கிய இலட்சியத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பது, அவரை நினைவுகூர்வதற்குச் சிறந்த வழிமுறையாகும் என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.