சீன-பிரேசில் உறவின் புதிய எதிர்காலம் உருவாக்கப்படும்

 

பிரேசில் அரசுத் தலைவர் லுலா டா சில்வா சீனப் பயணத்தை நிறைவு செய்த போது, அந்நாட்டின் செய்தி ஊடகங்களும் பல்வேறு துறைகளும் இந்த அரசுப்பயணத்தை வெகுவாக பாராட்டியுள்ளன. அதில், பிரேசில்-சீன அரசுத் தலைவர்கள் வரலாற்றை உருவாக்குவது, லுலாவின் சீனப் பயணம் பிரேசிலுக்கு வாய்ப்பு கதவைத் திறப்பது போன்ற பாராட்டுகள் அதிகம் கிடைத்துள்ளன.
இவ்வாண்டு, சீனாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்டதன் 30ஆவது ஆண்டு நிறைவு. அடுத்த ஆண்டு, இரு நாட்டு தூதரக உறவு நிறுவப்பட்டதன் 50ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது. இந்த முக்கியத் தருணத்தில், லுலாவின் சீனப் பயணம், பன்னாட்டுச் சமூகத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தரப்புக் கூட்டறிக்கையின்படி, இந்த பயணம் மிகவும் வெற்றிகரமானது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் லுலாவுடன் நடத்திய சந்திப்பில், சீன–பிரேசில் உறவின் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதாக தெரிவித்தார். சீனாவுடனான உறவை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது, பிரேசிலின் சட்டம் இயற்றும் அமைப்பு மற்றும் பல்வேறு துறைகளின் பொதுவான விருப்பமாகும் என்று லுலா கூறினார்.
இந்தப் பயண நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் போது, சீனாவுடன் புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கும் பிரேசிலின் விருப்பம் மிகவும் வலிமையாகத் தெரிந்தது. குறைந்த கார்பன் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், விமானம் மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றில் இரு தரப்பும், ஒத்துழைப்புகளை விரிவாக்கி வருகின்றன. இதன் மூலமாக, பரந்தப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பம் ரீதியிலான ஏகபோகத்தை முறியடிப்பதற்கு செயல்விளக்கம் அளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author