சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பொறியியல் அலுவலகம் மார்ச் 12ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, தற்போது சீன விண்வெளி நிலையம் இயல்பாக இயங்கி வருகிறது. ஷென்சோ-15 விண் கலத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் விண்வெளிவீரர்களின் உடல் நிலை சீராக உள்ளது. அவர்கள் ஜுன் திங்கள் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
திட்டத்தின்படி, தியான்சோ-6 சரக்கு விண் கலம், ஷென்சோ-16 மற்றும் ஷென்சோ-17 விண் கலங்கள் ஆகியவை 2023ஆம் ஆண்டு ஏவப்படும்.
அமைதி நோக்கிற்காக பயன்படுத்துவது, சமநிலையில் ஒன்றுக்கொன்று நலன் தருவது, கூட்டாக வளர்வது ஆகிய கோட்பாடுகளில் சீனா எப்போதுமே ஊன்றி நின்று, சீன விண்வெளி நிலையத்தை, சர்வதேசச் சமூகத்துக்குத் திறந்து வைக்கப்படும் ஒத்துழைப்பு மேடையாக உருவாக்க முயற்சி செய்து வருகிறது. மேலும், சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பொறியியல் அலுவலகமும், விண்வெளி விவகாரத்துக்கான ஐ.நா அலுவலகமும் கூட்டாகத் தேர்ந்தெடுத்த முதல் தொகுதி ஆய்வுத் திட்டங்கள், இவ்வாண்டு சீன விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படத் துவங்கும்.