சீன மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ம் நாள் பெய்ஜிங்கில் பிரேசில் அரசுத் தலைவர் லுலா டா சில்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பிரேசிலும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். இரு தரப்புகள், பரந்துபட்ட பொது நலன்களைக் கொண்டுள்ளன. சீன-பிரேசில் உறவுக்கு சீனா எப்போதும் தூதாண்மை முன்னுரிமை கொடுத்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. பிரிக்ஸ் நாடுகள், ஜி-20 குழு உள்ளிட்ட பல தரப்பு கூட்டமைப்புகளின் கீழே, இரு தரப்பும் அக்கறை செலுத்தும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து நெடுநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா பிரேசிலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.


பிரேசில் அரசுத் தலைவர் லுலா இப்பேச்சுவார்த்தையில் கூறுகையில்
இன்றைய உலகின் அரசியல், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு துறைகளில் இன்றியமையாத முக்கிய ஆற்றலாக விளங்கி வரும் சீனா, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது.

பல முக்கிய சர்வதேச விவகாரங்களில் பிரேசிலும் சீனாவும் ஒத்த கருத்துக்கள் மற்றும் கூட்டு நலன்களைக் கொண்டுள்ளன. பலதரப்பு வாதம் மற்றும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியைப் பேணிக்காக்க இரு நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ஜி20, பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட பலதரப்பு கூட்டமைப்புகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சர்வதேச நிதி, காலநிலை மாற்றச் சமாளிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பைப் பலப்படுத்த பிரசேல் சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடு, எண்முறைப் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு, வறுமை ஒழிப்பு, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.
மேலும், பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்குவது பற்றிய சீன மக்கள் குடியரசு மற்றும் பிரேசில் கூட்டாட்சி குடியரசின் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author