சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 27ஆம் நாள் மாலை, மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள வியாட்நாம் தலைமை அமைச்சர் ஃபம் மின்சின்னைச் சந்தித்துரையாடினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீன-வியாட்நாம் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 15ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் சர்வதேச நிலைமையைச் சந்திக்கும் இரு நாடுகள், ஒத்துழைப்பு மேற்கொண்டு, வளர்ச்சியை கூட்டாக நனவாக்கி, உலகிற்கு நிதான தன்மையை ஊற்ற வேண்டும் என்றார்.
ஃபம் மின்சின் பேசுகையில் உங்களுக்கு, வேலை அதிகமான நிலைமையில், என்னையும் எங்களது பிரதிநிதிக் குழுவையும் சந்தித்ததற்கு மிக்க நன்றி என்று கூறினார். ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக்கும், சீனாவின் புதிய தலைமை குழுவுக்கும் வியாட்நாம் கட்சி மற்றும் வியாட்நாம் உறுதியாக ஆதரவு அளிக்கின்றது என்று தெரிவித்தார்.