ஜப்பானின் தலைவர் யாசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்தக் கூடும் என்பதை ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விமர்சித்தார். ரஷியாவின் கருத்துக்கு சீனா பாராட்டு தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன்ஜியென் 26ஆம் நாள் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ள முதல் நிலை போர் குற்றவாளிகளாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ராணுவ அதிகாரிகள் புனிதப்படுத்தப்பட்ட யாசுகுனி கல்லறை, ஜப்பானிய இராணுவ வெறியர்கள் வெளிநாடுகளில் ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததன் அடையாளமாக கருதப்படுகின்றது. இவ்வாண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக ஃபாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நினைவு ஆகும். ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை சரிவர நோக்கி, நடைமுறைகளின் மூலம் இராணுவ வெறியர்களின் குற்றச்செயல்களுத்து மனம் வருந்தி போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
