ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு  

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) அதிக உணவுப் பணவீக்கம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என அறிவித்துள்ளது.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட எம்பிசி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து விவாதத்தித்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், பணவீக்கம் பரவலாக குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா தொற்றுநோய் தணிந்த பிறகு உயர் பணவீக்க அளவைச் சமாளிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி 2022இல் ரெப்போ விகிதத்தை 250 புள்ளிகள் அதிகரித்து 6.50 சதவீதமாக உயர்த்திய நிலையில், தற்போதுவரை அது தொடர்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author