இலங்கை அரசுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை-சீன நட்புறவு பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பின் பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. இந்த பயணத்தின் மூலம், இரு நாட்டுறவு, முந்தைய அடிப்படையிலிருந்து புதிய கட்டத்துக்கு நுழையும் என்று நம்புகிறேன் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 2004ம் ஆண்டில் வேளாண்மை அமைச்சராக நான் சீனாவில் பயணம் மேற்கொண்டேன். கடந்த 20 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம், தொழில் நுட்பம் முதலிய பல துறைகளில் சீனா சாதனைகளைப் படைத்துள்ளது. சீனாவின் மாற்றங்களை உணர்ந்து கொள்கிறேன்.
தற்போது புதிய எரியாற்றல் ஆய்வு மற்றும் பயன்பாட்டுத் துறையில் சீனா உலகின் முன்னணியில் உள்ளது. இத்துறை சார்ந்து சீனாவின் தொழில் நுட்ப உதவி மற்றும் முதலீட்டைப் பெற விரும்புகிறேன்.
உலகின் வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம் ஆகியவை குறித்து சீனா முன்மொழிந்த முன்மொழிவுகள், உலகின் பல்வகைமையைப் பேணிக்காத்து, உலகின் சீரான வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இவை, உலகிற்குப் புதிய நிலைமையைத் திறந்து வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.