அடிப்படை ஆய்வை வலுப்படுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தற்சார்பு மற்றும் சுய வலிமையை நனவாக்குவது என்ற தலைப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய முக்கிய கட்டுரை ஆகஸ்டு முதல் நாள் ஜுயூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.
தற்போது, புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியும் தொழில் மாற்றமும் ஆழ்ந்த முறையில் வளர்ந்து வருகின்றன. பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியும் முன்னேறி வருகிறது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப போட்டியைக் கையாள்வதற்கும், புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி உயர்தர வளர்ச்சியை நனவாக்குவதற்கும், அடிப்படை ஆய்வை வலுப்படுத்த வேண்டியிருப்பது அவசியம் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, அடிப்படை ஆய்வுக்கான முன்னோக்கு மற்றும் முறையான ஏற்பாட்டை வலுப்படுத்த வேண்டும். அடிப்படை ஆய்வு முறைமை மற்றும் இயங்குமுறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்க வேண்டும். அடிப்படை ஆய்வுக்கான உயர்நிலை ஆதாரத் தளத்தை உருவாக்க வேண்டும். அடிப்படை ஆய்வுக்கு திறமைசாலிகள் குழுவின் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும். அடிப்படை ஆய்வில் விரிவான சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை ஆய்வுக்கு சாதகமான புத்தாக்க சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.