சீன ஊடகக் குழுமம், கம்போடியாவில் உள்ள சீனத் தூதரகம், கம்போடிய ரோயல் ஆய்வகம் ஆகியவை கூட்டாக நடத்திய புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ற உரையாடல் ஆகஸ்ட் 9ஆம் நாள் கம்போடியாவின் பெனாம் பென் நகரில் நடைபெற்றது. கம்போடிய ரோயல் ஆய்வகத்தின் தலைவர் சோக் டோட்சி, கம்போடியாவுக்கான சீனத் தூதர் வாங் வென்பின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். கம்போனிய ரோயல் ஆய்வகம், கம்போடிய-சீன உறவு வளர்ச்சி சங்கம் முதலிய அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், அறிஞர்கள், இரு நாட்டு ஊடகப் பிரமுகர்கள், கம்போடியாவில் உள்ள சீன முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கம்போடிய மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அடங்கிய 300 பேர் இதில் கலந்து கொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3 முழு அமர்வு, உலகம் மற்றும் கம்போடியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவம், சீர்திருத்தத்தை சீனா மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது மற்றும் சீன நவீனமயமாக்க கட்டுமானம் கம்போடியாவுக்கு வழங்கக்கூடிய அனுபவம். புதிய யுகத்தில் சீன-கம்போடிய பொது எதிர்கால சமூகத்தின் உயர் தரக் கட்டுமானம் என்ற விருப்பத்துடனான புதிய வாய்ப்புகள் ஆகியவை குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கம்போடியாவில் நடைபெற்ற புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ற உரையாடல்
You May Also Like
12வது சீன-ஐரோப்பிய மன்றக் கூட்டம்
November 22, 2024
10+3 நாடுகளின் ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் முன்மொழிவுகள்
July 27, 2024
சீன-அமெரிக்கப் பொருளாதாரப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது
September 21, 2024
