சிறையில் மயங்கி விழுந்த கன்னட நடிகர் தர்ஷன்  

கன்னட நடிகரும், ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருமான தர்ஷன் தூகுதீபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல கன்னட நடிகர் மயங்கி விழுந்ததில் காயமடைந்தார் எனவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடக தகவல்களின்படி, சிறையில் தர்ஷனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் ஏற்கனவே கவலைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், அவர் குணமடைந்து வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author