சீனாவின் 3A கணினி விளையாட்டு பற்றிய இணையப் பயனாளர்களின் கருத்துகள்

பிளாக் மித்: வூகொங் என்னும் சீனாவின் 3A கணினி விளையாட்டு, புதிய சாதனையைப் பெற்றது.

சீனாவின் புராணக் கதை பற்றிய இந்த விளையாட்டு வெளியிடப்பட்டதன் 1 மணி நேரத்துக்குள், ஸ்டீம் என்னும் விளையாட்டு வரிசையில் முதலாவது இடத்தை வகித்து, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, இந்த உயர்தர விளையாட்டு, சீன விளையாட்டுத் தொழிலின் பெரும் உள்ளார்ந்த ஆற்றலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக 88.2 விழுக்காட்டு இணையப் பயனாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த விளையாட்டின் மூலம், மேற்கு நோக்கிய பயணம் என்னும் சீனாவின் புராணக் கதையையும், சீனாவின் சிறந்த பாரம்பரிய பண்பாட்டையும் அறிந்து கொள்ள விரும்புவதாக 89.6 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author