தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்  

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 28) திருச்சியில் பகல் 12 மணிக்கு ரயில் கிளம்பி மாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10.45க்கு கிளம்பும் ரயில் மாலை 4.10க்கு திருச்சிக்கு சென்றடையும்.
இதேபோல், புதன்கிழமை இரவு 7.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த நாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணிக்கு கிளம்பும் ரயில் சனிக்கிழமை காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

You May Also Like

More From Author