96 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் அடுத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முன்னணி வேடங்களில் நடித்துள்ள இந்த படம் குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு படமாக தயாராகி உள்ளது.
ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவையும், கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், சனிக்கிழமை (செப்டம்பர் 7) படத்தின் டீசர் கிளரவோட்டம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சமீபத்தில் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
