கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான மற்றும் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று சீராக தண்ணீர் விழுந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]
ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா [மேலும்…]
நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]
65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]
அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]