அக்;-17 தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் மகாமண்டபம் கல்லூண் பொருத்தும் பணியினை தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாதன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆலங்குளம் நத்தம் மாரியமன் கோவில் திருப்பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றது.
நிகழ்ச்சி மாலை சிறுமிகளின் புஷ்பாஞ்லி மற்றும் இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
நத்தம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காலை 11 மணியளவில் மகா மண்டபம் கல்தூண் பொருத்தும் பணி கோலாகலமாக நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தனர்.
முன்னதாக கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பெண்கள் கல்தூண் மீது மஞ்சள் பூசி குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்விழாவில் ஆலங்குளம் அறிவு திருக்கோவில் டிரஸ்டி ஆதித்தன், உதயராஜ், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கசெல்வம், தொழிலதிபர் மணிகண்டன். அண்ணாவி ஆறுமுகம், வி.சி.தமிழரசன், வழக்கறிஞர்
ஆ.ராஜா, முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், வார்டு உறுப்பினர் விஜிஎஸ் கணேசன், அன்னததாய் சொரிமுத்து, எம்.ஸ். மாரிமுத்து, எஸ்.ஆர். சொக்கலிங்கம், கே.எஸ். கண்ணன், நகர வியாபாரிகள் சங்கம் பொருளாளர் குழந்தைவேலு, ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், துணை தலைவர் லிவிங்ஸ்டன்விமல், வக்கீல் கருப்பசித்தன், எஸ்.எஸ்.தங்கம், செல்வம், தங்கராஜ். ஸ்டேக் ஹைடெக் சிவக்குமார், ராமர், ஆறுமுகராஜன், சொரிமுத்து, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், சோனா மகேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை
நத்தம்மாரியம்மன் கோவில் நிர்வாகி கே. எஸ். குமார் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
ஆலங்குளம் நத்தம் மாரியம்மன்கோவில் மகாமண்டபம் கல்தூண் பொருத்தும் விழா
