தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்குகிறது.
குறிப்பாக நெல்லை தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் கன மழை பெய்துவரும் நிலையில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கிறது.
இந்த நிலையில் தற்போது நெல்லை தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர். அதன்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர் கன மழை காரணமாக இன்று மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.