சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
முன்னதாக, சென்னையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடந்த தமிழ்நாடு முதலீட்டார்கள் மாநாட்டில் ரூ.20,114 கோடியில் மூன்று புனல் மின் நிலையங்களை அமைக்க கிரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக அந்த நிறுவனம் சேலம் மேட்டூரில் ரூ.5,947 கோடியில் மூடப்பட்ட நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.