கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உக்ரைனில் 477 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் உச்சபட்சமாக, உக்ரைனின் 477 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ரஷ்யா கைப்பற்றியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் திடீர் தாக்குதல் நடத்திய உக்ரைன், ஆயிரத்து 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைபற்றியுள்ளது.