2023ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் மொத்த பரப்பளவில் 25 சதவீதம் காடுகள் அமைந்துள்ளன. இதேவேளையில் செயற்கை காடுகளின் பரப்பளவில், சீனா உலகளவில் முதலிடம் வகிக்கிறது.
பசுமையான நிலப்பரப்பளவு அதிகரிப்பிலும் முதலிடம் பிடித்துள்ளதாக நான்னிங் நகரில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலக வனத்தொழில் மாநாட்டில் சீனத் தேசிய வன மற்றும் புல்வெளி துறை அதிகாரி சனிக்கிழமை கூறினார்.