பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’.
நேற்று நள்ளிரவு நடந்த இந்த துல்லிய தாக்குதலுக்கு பிறகு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 21 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ADCP-2, சிரிவெண்ணெலா, இந்த விமான நிலையங்களுக்கு பயணிக்கும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், மே 10 வரை அமிர்தசரஸ் விமான நிலையம் தவிர மற்ற மாவட்டங்களின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
