சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் கன்சு மாநிலத்தின் லன் சோ நகரில் மஞ்சல் ஆற்றுப்பள்ளத்தாக்கின் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் தர வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் எழுச்சியை உணர்வுபூர்வமாக செயல்படுத்தி, பாதுகாப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நெடுநோக்கு தேவைக்கிணங்க, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதை இயக்கு ஆற்றலாக கொண்டு, உயிரின வாழ்க்கை சூழலுக்கு முன்னுரிமை அளித்து பசுமை வளர்ச்சியில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். முழு ஆற்றுப்பள்ளத்தாக்கின் உயரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு புதிய நிலைக்கு முன்னேறி, பசுமை வளர்ச்சி முறையின் மாற்றம் புதிய முன்னேற்றம் அடைந்து, உயர் தர வளர்ச்சி புதிய பயன் பெற்று, பொது மக்களின் வாழ்க்கையில் புதிய மேம்பாடு ஏற்படுவதை விரைவுபடுத்தி, மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கின் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் தர வளர்ச்சியின் புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.