இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் நட்சத்திர இடதுகை அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு கடந்த சில தொடர்களாகவே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் மிகச்சிறப்பான பினிஷராக பார்க்கப்படும் அவரை தொடர்ந்து இந்திய அணியின் நிர்வாகமும் ஆதரித்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2006 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய முதன்மை அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
இவ்வேளையில் இந்த இரு முக்கிய தொடர்களுக்கு முன்னதாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் உத்தரப் பிரதேச அணிக்காக களமிறங்கி விளையாடி வருகிறார். எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படும் ரிங்கு சிங் அதற்கு முன்னதாக தற்போது விஜய் ஹசாரே தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது தேர்வினை நியாயப்படுத்தி மாஸான ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளார்.
அந்த வகையில் இன்று டிசம்பர் 26 ஆம் தேதி உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடிய அவர் சண்டிகார் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டியில் 60 பந்துகளை சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 11 மற்றும் 4 சிக்சர் என 106 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஜிதேஷ் சர்மாவிற்கு பதிலாக தான் இடம் பிடித்ததன் காரணத்தையும் அவர் நியாயப்படுத்தி உள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்து வருவது நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
இவ்வேளையில் இந்த விஜய் ஹசாரே தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவதன் மூலம் மீண்டும் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பதற்காக காத்திருக்கிறார். அவரது இந்த சிறப்பான சதம் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
