துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிகளும் ம் கட்சி பேதமின்றி ஆதரவு வழங்க வேண்டுமெனஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தமிழகத்திற்கு ஒரு பெரும் பெருமை,” என்றார்.
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி திமுக கூட்டணியிடம் EPS வேண்டுகோள்
