குப்பைக்கான அபராதம் உயர்வு.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை..

Estimated read time 1 min read

சென்னையில் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைக்கான அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் அபராதம் வசூலித்து வந்தாலும், குப்பைகள் கொட்டுப்படுவதை முற்றிலுமாக சரிசெய்ய முடியவில்லை.

இதனையடுத்து சென்னையில் குப்பை, கட்டடக் கழிவுகளை கொட்டும் நடவடிக்கைக்கு அபராதத்தொகையை உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

> அதன்படி, கட்டடக் கழிவுகளை ஒரு டன் வரை கொட்டினால் அபராதத்தை ரூ. 2,000லிருந்து ரூ.5,000ஆக உயர்த்த முடிவு..

>வியாபாரிகள் குப்பைத்தொட்டி வைக்காமல் இருந்தால் அபராதத்தை ரூ. 100லிருந்து ரூ.1000 ஆக உயர்த்த திட்டம்

>மரக்கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவதற்கான அபராதத்தை ரூ. 200லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்த முடிவு..

>பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பதற்காக அபராதத்தை ரூ.1,000லிருந்து ரூ.5,000ஆக உயர்த்த முடிவு..

> சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.1000ஆக உயர்த்தவும் திட்டம்..

Please follow and like us:

You May Also Like

More From Author