நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடையும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 5) விநியோகிக்க உள்ளார்.
மஹாராஷ்டிராவின் வாஷிமில் நடைபெறும் நிகழ்வின் போது, நேரடி பலன் பரிமாற்றம் மூலம் மொத்தம் ரூ.20,000 கோடி இதற்காக விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கிய பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம், குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குகிறது.
மகாராஷ்டிர விவசாயிகளுக்கு மாநிலத்தின் நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா மூலம் கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி இந்த நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.
பிஎம் கிசான் சம்மன் நிதியின் 18வது தவணையை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி
