மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கம்

Estimated read time 0 min read

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 பேர் மயக்கமடைந்தனர்.

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகசங்கள் இடம்பெற்றன. சுகோய் சு 30, ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்ட 72 விமானங்களை விதவிதமாக இயக்கி சாகசத்தை விமானப்படை வீரர்கள் அரங்கேற்றினர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சாகச நிகழ்ச்சியை காண மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரினாவில் திரண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்தபடி விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author