தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா – பொன்னியின் செல்வன் -1 படத்திற்கு 4 விருதுகள்!

Estimated read time 1 min read

டெல்லியில்  70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா  விக்யான் பவனில் இன்று நடைபெற்றது.

இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு 4 விருதுகள் கிடைத்தன.  சிறந்த பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு என 4 விருதுகள் கிடைத்தன. இய்குநர் மணி ரத்னம், சுபாஷ்கரன், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் குடியரசு தலைவரிடம் இருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

மேலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை மற்றும் நடனம் ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளும் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த நடிகராக காந்தாரா ரிஷப் ஷெட்டி, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்), சிறந்த சண்டை இயக்குனராக அன்பறிவ் (கேஜிஎப்-2), சிறந்த இசையமைப்பாளராக பிரிதம் (பிரம்மாஸ்திரா-1) என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author