கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொள்ளப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனட பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சனை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் நிஜ்ஜார் கொலையிலும் கனடாவில் நடக்கும் குற்ற செயல்கள் பலவற்றிலும் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு உள்ளதாக கனடா முன்வைத்துள்ளது.
இதனால் கோபமடைந்து கனடாவிலுள்ள இந்திய தூதர்களை திரும்ப பெறுவதாக இந்தியா அறிவித்திருந்தது. மேலும் இந்தியாவிலுள்ள கனட தூதர்கள் வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் கனடா இக்கொலை தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தது. இந்நிலையில் ரவுடி பிஸ்னோய் கும்பலுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் தான் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறி வைப்பதாகவும் புதிய குற்றச்சாட்டை கனடா தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் பேட்டியில் கூறியதாவது தெற்காசிய சமூகத்தை சேர்ந்த இந்தியா குறி வைக்கிறது எனவும், குறிப்பாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறி வைக்கின்றனர் எனவும் கூறுகின்றனர். மேலும் குற்றப் பின்னணி கொண்ட குழுக்களுடன் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா காவல்துறை நம்புகின்றது. அதோடு காலிஸ்தான் ஆதரவாளர்களை குறி வைக்க லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை இந்தியா பயன்படுத்துகிறது எனவும் கூறுகின்றனர். இந்த குற்ற கும்பலுக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகின்றோம் என்று கூறுகின்றனர்.