தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Estimated read time 1 min read

எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்குதில் அரசு கவனம் செலுத்துகி வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 62-து (NDC) பாடத்திட்டத்தின் கீழ் எம்ஃபில் படித்த,2022-ம் ஆண்டு தொகுதி  அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். உலகளாவிய எதிர்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, சிறந்த வழிநடத்தும் திறன் கொண்ட சிந்தனையாளர்களாக செயல்படுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

போர்முறையானது இன்று, பாரம்பரிய போர்க்களங்களை விஞ்சி பல கள சூழல்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் இணையதள தாக்குதல், தகவல் போர், போன்றவையும் வழக்கமான நடவடிக்கைகளைப் போலவே முக்கியமானது என அவர் கூறினார்.

இணையதள தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள், பொருளாதார போர் ஆகியவை ஒரு தோட்டா கூட சுடப்படாமல் ஒரு முழு தேசத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தக்கூடியவை என்று அவர் குறிப்பிட்டார்.

சிக்கலான பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திறனை ராணுவத் அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலத்திற்கு ஏற்ற ராணுவத்தை உருவாக்கும் மிக முக்கியமான சக்தி என்று  ராஜ்நாத் சிங் விவரித்தார். நமது அதிகாரிகள் இந்த தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ராணுவ நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், உலகளாவிய பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து உறுதியான புரிதலை அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் போர்க்களத்திற்கு அப்பால், ராஜதந்திரம், பொருளாதாரம், சர்வதேச சட்டம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சிறந்த ராணுவத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை  ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author