தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 22 முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1-2, 3-5, 6-8, 9-10, 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக் கருத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில் பேச்சு, ஓவியம், நடனம் மற்றும் மிமிக்ரி என பல்வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.