ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய பாஜக ஆட்சியில் கடந்த 2019 இல் பிரிக்கப்பட்டதற்கு பின் முதல் சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்றார்.பத்து ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் உமர் அப்துல்லாவின் தலைமையில் அமைச்சரவை முதலில் கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஒப்புதல் அளிக்க மத்தியில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது தொடர்ந்து தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ், பி.டி.பி ஆகிய கட்சியினர் தேர்தலின் போது இதையே முதன்மை வாக்குறுதியாக கூறினர்.
இதுபோன்று முதலமைச்சர் வாகனம் சாலையில் செல்லும் போது மற்ற வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கிரீன் காரிடர் விதியை முதலமைச்சர் உமர் அப்துல்லா நீக்கி உள்ளார்.