சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், இப்பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச்
செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் பங்கெடுத்து, பல்வேறு தேசிய இனத்தவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
பண்டைய காலம் தொட்டு, சின்ஜியாங், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகும். 1955ஆம் ஆண்டில் இத்தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். கடந்த 70 ஆண்டுகளில், வறுமையிலிருந்து விடுபட்டு செழுமையடைந்து.
பிந்தைய நிலையிலிருந்து முன்னேறி, தொடர்ந்து திறப்புப் பணியை மேற்கொண்டு சின்ஜியாஹ் சிறப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. இக்கொண்டாட்டத்தின் மூலம், சின்ஜியாங்கை பார்ப்பதற்கு ஒரு முக்கிய ஜன்னலை உலகத்திற்கு வழங்கியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் சின்ஜியாங் பெற்றுள்ள வரலாற்று சாதனைகள் இக்கொண்டாட்டக் கூட்டத்தின் மூலம் உலகத்திற்கு வெளிகாட்டப்பட்டுள்ளன. சீனத் தேசிய இனத் தன்னாட்சி அமைப்புமுறையின் மேம்பாடு, புதிய யுகத்தில் சின்ஜியாங் மீதான ஆட்சிமுறை திட்டம் ஆகியவை அறிவியல்பூர்வமானவை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், இத்தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்ற பல்வேறு தேசிய இனத்தவர்கள் சோஷலிய நவீனமயமான சின்ஜியாங்கை உருவாக்கும் மன உறுதியும் இதன் மூலம் வெளிகாட்டப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.